யாழில் நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்து!!

258

நேற்றிரவு யாழ்ப்பாணம் – நாவற்குழி மாதா கோவிலடியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த கார், வீதியோரத்தில் உள்ள மாதா கோவிலின் மதலுடன் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இருப்பினும், இந்த விபத்தின்போது வாகனத்தில் பயணம் செய்த மூவருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை.



கனடாவில் இருந்து வந்த பெண் ஒருவர், அவரது கணவர் மற்றும் 5வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஆகியோர் பயணித்த காரே இவ்வாறு விபத்தில் சிக்கியது. இந்நிலையில், நித்திரை கலக்கமே விபத்துக்கான காரணம் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.