யாழ். வீதியில் இடம்பெற்ற விபத்தில் யானைக்குட்டி பரிதாப மரணம்!!

360

நீர்கொழும்பு, யாழ்ப்பாண வீதியில் இன்று அதிகாலை வீதியை கடக்க முற்பட்ட குட்டி யானை ஒன்று ஹயஸ் ரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகி இறந்துள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

குறித்த குட்டி யானை இன்று (18.03.2025) அதிகாலை 12:30 மணியளவில் நீர்கொழும்பு, யாழ்ப்பாண வீதியில் சென்ற ஹயஸ் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே அந்த குட்டி யானை இறந்துள்ளது.

இருப்பினும், வாகனத்தில் சென்றவர்கள் எதுவித பாதிப்பும் இன்றி சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.



மேலும், தற்பொழுது விவசாய அறுவடை காலமென்பதனால் யானைகள் வயல்கள் மற்றும் நீரோட்டம் உள்ள குளங்களிற்கு செல்வதற்கு பல இடங்களில் பிரதான வீதியை கடந்து கூட்டம் கூட்டமாக செல்கின்றன.

ஆகையினால் இரவு நேரங்களில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் உன்னிப்பாகவும் மிக அவதானத்தோடும் வாகனங்களை செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.