விரைவில் சேவையில் இருந்து விடைபெறுகின்றது Skype!!

254

2025 மே மாதம் முதல் Microsoft நிறுவனம் Skype இணையச் சேவையை நிறுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சேவை 2003ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

2011ஆம் ஆண்டில் Microsoft நிறுவனம் Skype சேவையை வாங்கியது. இந்த ஆண்டு (2025) மே மாதம் முதல் Skype இருக்காது என்று Skype தளம் அதன் சமூக ஊடகங்களில் தெரிவித்தது.



முதலில் இலவசமாக கணினிகளுக்கு இடையே குரல் அழைப்புகளை வழங்கியது Skype. அந்தக் காலத்தில் அது புரட்சிகரமாகப் பார்க்கப்பட்டது. ஆண்டுகள் கடந்துபோக இணையத்தின் வேகம் முன்னேற்றம் அடைந்தது.

பிறகு Skype தளத்தில் காணொளி அழைப்புகளும் சேர்க்கப்பட்டன. 2005ஆம் ஆண்டுக்குள் Skype தளத்திற்கு 50 மில்லியன் பேர் பதிவு செய்தனர். அதேசமயம் அண்மை ஆண்டுகளில் அறிவார்ந்த கைப்பேசிகள் அறிமுகம் கண்டன.

Meta நிறுவனத்தின் WhatsApp, Zoom போன்ற தளங்கள் வந்தவுடன் Skype மீதான ஈர்ப்பு பாவனையாளர்களிடம் குறைந்த நிலையில், Skype இணையச் சேவையை நிறுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.