வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பாடசாலைக்கு மத்தியஸ்தம் செயற்திட்டம் முன்னெடுப்பு!!

653

பாடசாலைக்கு மத்தியஸ்தம் என்ற தொனிப்பொருளில் மத்தியஸ்தர் சபை தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டம் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் நேற்று (20.02) இடம்பெற்றது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

நீதி அமைச்சின் வழிகாட்டலில் சீடா நிறுவனத்தின் நிதி உதவியில் வவுனியா, மாவட்ட செயலகத்தின் மத்தியஸ்தர் சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.காண்டீபன் ஏற்பாட்டில் கல்லூரியின் அதிபர் அருட் சகோதரி எஸ்.ஜே.சியாமினி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.



நீதி அமைச்சின் கீழ் உள்ள மத்தியஸ்தர் சபை ஆணைக்குழுவினால் நாடு முழுவதும் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் பாடசாலைக்கு மத்தியஸ்தம் என்ற தொனிப்பொருளில் மத்தியஸ்தர் சபை தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டத்தை ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு முன்னெடுத்து வருகின்றது.

அதன் ஒரு கட்டமாக வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வவுனியா, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மத்தியஸ்தம் தொடர்பான விழிப்புணர்வும் அது தொடர்பான செயற்பாடுகள் தொடர்பிலும் பயிற்சி அரங்கு முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா – மன்னார் மாவட்ட மத்தியஸ்தர் சபை பயிற்சியாளரும், இணைப்பு அதிகாரியுமான எஸ்.விமலராஜா, யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த மத்தியஸ்த சபை அபிவிருத்தி உத்தியோகத்தர்களான முகுந்தன், தர்சிகா,

வவுனியா பிரதேச செயலக மத்தியஸ்த சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெசிந்தா ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வைத்தனர். இப் பயிற்சியானது தொடர்ந்து மூன்று தினங்களுக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.