வவுனியாவில் கலாசார பாரம்பரியத்துடன் எளிமையான முறையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வு!!

1340

வவுனியா மாவட்ட செயலகத்தில் எளிமையான முறையில் மூவின கலாசார பாரம்பரியத்துடன் இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04.02.2025) இடம்பெற்றிருந்தது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில் குறித்த நிகழ்வானது இன்று காலை 9 மணிக்கு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதுடன், தேசியக் கொடியினை அரசாங்க அதிபர் ஏற்றி வைத்திருந்தார். இதன் பாேது மாவட்ட செயலக உத்தியாேகத்தர்களால் தமிழ், சிங்கள மாெழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.



இதனை தொடர்ந்து நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்தவர்களிற்காக இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டிருந்தது. அதனை தாெடர்ந்து தமிழ், சிங்கள, முஸ்லிம் கலாசாரங்களை பிரதிபலிக்கும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

மதத்தலைவர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியாேகத்தர்கள் கலாசார ஆடைகளுடன் நிகழ்வில் கலந்து காெண்டிருந்தனர்.