வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் 2025ம் ஆண்டுக்கான டிப்ளோமா (NVQ 5), சான்றிதழ் NVQ 4, NVQ 3 உட்பட பல்வேறு கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கற்கை நெறிக்கான முடிவுத் திகதி எதிர்வரும் 15.12.2024 என்பதனால் ஆண்டு 9ல் இருந்து பாடசாலை விலகிய மாணவர் முதல் உயர்தர பரீட்சைக்குத் தோற்றியுள்ளோர் மற்றும்,
தொழில் புரியும் அரச மற்றும் தனியார் நிறுவன உத்தியோகத்தர் வரைக்கும் தத்தம் தேவைகளுக்கேற்ப கற்கை நெறிகளுடன் இணைந்து கொள்ள முடியும் என கல்லூரியின் அதிபர் ஆ.நற்குனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பங்களை Online மூலமாகவும் நேரடியாகவும் சமர்ப்பிக்க முடியும் .
Online Application Link: https://ism.dtet.gov.lk/OnlineDTET/public/Application
பொருத்தமான மாணவர்கள் விண்ணப்பப் படிவங்களை கல்லூரிக்கு நேரடியாகச் சென்று பெற்றுக்கொள்ளுங்கள்.
மேலதிக தொடர்புகளுக்கு
அதிபர்,
தொழில்நுட்பக் கல்லூரி,
மன்னார் வீதி,
நெளுக்குளம்,
வவுனியா
தொலைபேசி இலக்கம் 024 222 3664, 024 222 6720.