வவுனியாவில் குளத்தில் தவறி விழுந்த இளைஞனின் சடலம் மீட்பு!!

2447

வவுனியா- மகாகச்சகொடி குளத்தில் கடந்த 26 ஆம் திகதி தவறி விழுந்த இளைஞனின் சடலம் இன்று வியாழக்கிழமை (28.11.2024) காலை மீட்கப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

மகாகச்சகொடி பகுதியைச் சேர்ந்த 21 வயதான சிரந்தஹசன் குணவர்த்தன என்ற இளைஞனின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவது,



கடந்த 26 ஆம் திகதி தனது நண்பன் ஒருவருடன் மகாகச்சகொடி குளத்திற்கு நீராடச் சென்ற போது கால் தவறி குளத்திற்குள் இளைஞன் விழுந்துள்ளார்.
இதனையடுத்து, ஊர் மக்கள் குறித்த இளைஞனை தேடியதுடன் மாமடு பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர்.

எனினும் மூன்று நாட்களாக இளைஞன் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் குறித்த இளைஞனின் சடலம் அந்த குளத்தில் இருந்து இன்று (28) காலை மீட்கப்பட்டுள்ளது.