வவுனியா பேராறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை!!

1058

வவுனியா, பேராறு அணையின் கீழ் பகுதியில் வசிப்பவர்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

கடந்த சில நாட்களாக வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக தாழ் நிலங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன், குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.



அந்தவகையில் பேராற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளமையால் அதன் 2 வடிகால்களும் 1 அடி உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளன. இதனால் நீர் செல்லும் பகுதியிலும், பேராறு அணையின் கீழ் பகுதியிலும் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.