வவுனியா ஈச்சங்குளம் துப்பாக்கிச்சூடு : இளைஞன் கைது!!

3016

வவுனியா ஈச்சங்குளம் பிரதேசத்தில் பெண் ஒருவர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவன் நேற்று செவ்வாய்க்கிழமை (19.11.2024) பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் கடந்த 03 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. ஈச்சங்குளம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் வவுனியா சுந்தரபுரம் பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் வவுனியா சுந்தரபுரம் பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய இளைஞன் ஆவார். சந்தேக நபரிடமிருந்து உள்நாட்டுத் துப்பாக்கி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.



தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.