நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் வன்னி தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகளின்படி தேசிய மக்கள் சக்தி 39894 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி சார்பாக கால்நடை வைத்தியர் செ.திலகநாதன் மற்றும் ஆசிரியர் ம.ஜெகதீஸ்வரன் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி 32232 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் றிசாட் பதியுதீன் அக் கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சி 29711 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் துரைராஜா ரவிகரன் அக் கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 21102 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் செல்வம் அடைக்கலநாதன் அக் கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை தொழிலாளர் கட்சி 17710 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் காதர் மஸ்தான் அக் கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வன்னி தேர்தல் தொகுதியிலிருந்து இம்முறை வைத்தியர் செ.திலகநாதன், ஆசிரியர் ம.ஜெகதீஸ்வரன் மற்றும் து.ரவிகரன் ஆகிய மூவரும் புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
முழுமையான விபரத்திற்கு கீழே உள்ள இணைப்பை அழுத்துக…
வன்னி தேர்தல் தொகுதி இறுதி முடிவு
வன்னி தேர்தல் தொகுதி தபால்மூல வாக்களிப்பு