இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் அடுத்த வாரம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இவரது இலங்கை விஜயம் ஜூலை 7ம் திகதி இடம்பெறவுள்ளது.
13வது சட்டத் திருத்தம் மூலத்தில் திருத்தங்கள் கொண்டுவர இலங்கை அரசாங்கம் பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது.
இலங்கை அரசின் இத் தீர்மானத்திற்கு இந்தியா தமது ஆட்சேபனையை தெரிவித்துள்ள நிலையில் சிவசங்கர் மேனன் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கிறார்.
இலங்கை வரும் சிவசங்கர் மேனன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபஷ மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆகியோரையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ எதிர்வரும் 4ஆம் திகதி இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.