வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 221 ஆவது நினைவு நாள் நிகழ்வு வவுனியாவில் இன்று (25.08.2024) அனுஸ்டிக்கப்பட்டது.
குறித்த நினைவு தினம் வவுனியா நகரசபை மற்றும் பண்டாரவன்னியன் விழாக்குழுவின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை செயலாளர் அ.பாலகிருபன் தலைமையில் நடைபெற்றது.
காலை 9 மணிக்கு வவுனியா மாவட்ட செயலக முன்றலில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் நினைவுத்தூபிக்கு முன்பாக விருந்தினர்கள் வரவேற்புடன் கொடியேற்றல் இடம்பெற்றுடன் கொடிக்கீதத்தினை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகள் பாடியமையிருந்தனர்.
அத்துடன் மங்கள விளக்கேற்றலுடன் பண்டாரவன்னியனின் நினைவுத்தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் P.A.சரத்சந்திர, சிறப்பு விருந்தினர்களாக வவுனியா பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தெ.ரதீஸ்வரன் மற்றும் கௌரவ விருந்தினர்களாக மாவட்ட திணைக்களத் தலைவர்கள், மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் விருந்தினர்களாக பொதுமக்கள் , பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை வவுனியா இலங்கை திருச்சபை த.க.பா மாணவர்கள் இசைத்தமையுடன் வரவேற்புரையினை சந்திரகுமார் கண்ணன், தலைமை உரையினை வவுனியா நகரசபை செயலாளர் அ.பாலகிருபன், சிறப்புச் சொற்பொழிவினை தமிழ்மணி அகளங்கள் ஆகியோர் முன்னெடுத்தமையுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகள் பாராட்டு பரிசில்கள் வழங்குதலுடன் நிகழ்வு சிறப்புற நிறைவுற்றிருந்து.