வவுனியாவில் 12 வயது மாணவன் ஐஸ் போதைப் பொருள் பாவித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!!

2448

வவுனியா நகரையண்டிய பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 12 வயது மாணவன் ஒருவன் ஐஸ் போதைப் பொருள் பாவித்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை தேறி வருவதாக பொலிசார் இன்று தெரிவித்தனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகரையண்டிய பிரபல பாடசாலையில் தரம் 7 இல் கல்வி பயிலும் 12 வயது மாணவன் ஒருவன் பாடசாலைக்கு முன்பாகவுள்ள கடை ஒன்றின் அருகில் இருந்த ஒதுக்குப்புறமான இடம் ஒன்றிற்கு சென்றுவிட்டு மீண்டும் பாடசாலைக்குள் சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் குறித்த மாணவன் தொடர்ச்சியாக வாந்தி எடுத்தமையால் பெற்றோருக்கு தெரியப்படுத்தி அவர்கள் ஊடாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவன் தற்போது நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த மாணவன் ஜஸ் போதைப் பொருளை பாவித்ததன் காரணமாக இவ் அசம்பாவிதம் ஏற்பட்டதாக பொலிசார் தெரிவத்தனர். அத்துடன் குறித்த மாணவன் இந்து மதகுரு ஒருவரின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.