மத்துகம – குருதிப்பிட்ட பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் மூவரினால் மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களால் கொடூரமான தாக்கப்பட்டு உயிரிழந்த இளம் தந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக உயிரிழந்தவரின் மனைவி வெலிப்பன்ன பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த பெப்ரவரி 14 , 2023 அன்று, கல்மட்ட, வெலிப்பன்ன வீதியில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச்சென்ற மூன்று பாடசாலைச் மாணவர்களை எச்சரித்த 34 வயதுடைய டொன் ரங்க விராஜ் ஜயசிங்க என்ற இளம் தந்தையொருவர் மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தால் அடித்துக் கொல்லப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மத்துகம நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் ரங்காவை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் மாகொல சிறுவர் தடுப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், அவரின் கல்லறையை சுத்தம் செய்து தினமும் விளக்குகளை ஏற்றி வரும் நிலையில், திடீரென சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக மனைவி முறைப்பாடு செய்துள்ளார். இதற்கமைய, வெலிப்பன்ன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.