14 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்ற தம்பதியினர்… ஒன்றாக சேர்த்து வைத்த நீதிமன்றம்!!

320

கேரளாவில் 14 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்ற தம்பதியரை, குடும்ப நல நீதிமன்றம் ஒன்றாக சேர்த்து வைத்துள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்தியா முழுவதும் பல்வேறு காரணங்களால் குடும்ப நல நீதிமன்றங்களில் விவாகரத்து பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கேரளாவின் ஆழப்புழாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதாவது, 14 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்ற தம்பதியர் நீதிமன்ற தலையீடு காரணமாக தங்களது திருமணத்தை மீண்டும் சட்டப்படி பதிவு செய்ய முன்வந்துள்ளனர்.



கடந்த 2006 -ம் ஆண்டு சுப்ரமணியன் (58) மற்றும் கிருஷ்ணகுமாரி (49) என்ற இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் திருமண வாழ்க்கை சில ஆண்டுகள் இனிதாக சென்று அகல்யா என்ற பெண் குழந்தை பிறந்தது.

இதனைதொடர்ந்து, இருவருக்குள் ஏற்பட்ட விரிசல் காரணமாக 2010 -ம் ஆண்டு மார்ச் மாதம் சட்டப்படி விவாகரத்து பெற்றனர்.

இதன்பின்னர், ஜீவனாம்சம் கோரி ஆலப்புழா குடும்ப நல நீதிமன்றத்தை கிருஷ்ணகுமாரி நாடினார். ஆனால், அதனை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் சுப்ரமணியன் வழக்கு தொடர்ந்தார்.

அப்போது, இந்த பிரச்சனைக்கு குடும்ப நல நீதிமன்றம் மூலம் சுமூகமாக தீர்வு காண வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய ஆலோசனைப்படி இருவரும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்தனர். இதனால், 15 வயதான மகள் அகல்யா தனது பெற்றோருடன் சேர்ந்து வாழ ஆர்வத்துடன் உள்ளார்.