சாதாரணதரப் பரீட்சை எழுதிய மகனிடம் இருந்து தாயின் மரணத்தை மறைத்த தந்தை!!

722

காலியில் மகனின் சாதாரண தர பரீட்சை முடியும் வரை தாயின் மரணத்தை மறைத்த தந்தையொருவர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 12ம் திகதி உயிரிழந்த தாய் குடும்ப உறுப்பினர்களுடன் மதிய உணவுக்கு பின் ஐஸ்கிரீம் சாப்பிட்டுள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அப்போது திடீரென ஏற்பட்ட இருமல் காரணமாக அவர் மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கூறபொபடுகின்றது. காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

தாய் இறந்தபோது, ​​அவரது மகனுக்கு க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிய இன்னும் 4 நாட்களே இருந நிலையில், தாயின் இறப்பைத் தாங்க முடியாமல் மகன் பரீட்சை எழுதமாட்டார் என்ற அச்சத்தில் தந்தை மற்றும் உறவினர்கள் மகனிடம் அதனை மறைத்துள்ளனர்.



இந்நிலையில் மகனின் பரீட்சை நிறைவடையும்வரை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சடலம் நேற்று காலியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.