உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இலங்கையில் நேற்றைய தினங்களுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (2024.05.15) தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 710,638 ரூபாவாக காணப்படுகின்றது. அதன்படி 24 கரட் ஒரு கிராம் தங்கம் 25,070 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் 8 கிராம் தங்கம் 200,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் ஒரு கிராமின் விலை 22,990 ரூபாவாக பதிவாகியதுடன், 22 கரட் 8 கிராம் தங்கம் 183,850 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,940 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 175,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.