க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதிய 80 வயது முதியவர்!!

495

நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் முதியவர் ஒருவர் பரீட்சை எழுதி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். பாணந்துறை, கிரிபெரிய பகுதியை சேர்ந்த 80 வயதான நிமல் சில்வாவே இவ்வாறு பரீட்சை எழுதியுள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற அவர் விசேடமாக கணித பாட பரீட்சையில் தோற்றியுள்ளார்.

இவர் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருவதுடன் பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். கல்வியை பயில வயது ஒரு தடை இல்லையென பலரும் குறிப்பிட்டுள்ளனர்.