அம்மாவும், மகனும் 10ம் வகுப்பில் ஒன்றாக படித்து தேர்ச்சி.. சுவாரஸ்ய சம்பவம்!!

253

தாயும், மகனும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒன்றாக படித்து தேர்ச்சி பெற்ற சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

தமிழக மாவட்டமான திருவண்ணாமலை, வந்தவாசியை அடுத்த கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த தாயும் மகனும் 10 -ம் வகுப்பில் ஒன்றாக படித்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த கிராமத்தைச் சேர்ந்த நித்யா என்பவர் 9 -ம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை நிறுத்தியுள்ளார். இதனால், கோவிலூர் அரசுப் பள்ளியில் படிக்கும் தனது மகன் சந்தோஷ் உடன் இணைந்து தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார்.



இந்நிலையில், தாயும் மகனும் ஒன்றாக படித்து 10ம் வகுப்பு தேர்வை எழுதி வெற்றி பெற்றுள்ளனர். இதில் நித்யா, கோவிலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி சமையலராக தற்காலிக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் படித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

அமலா பால் நடிப்பில் வெளியான அம்மா கணக்கு திரைப்படத்தை போலவே திருவண்ணாமலையில் அம்மாவும், மகனும் ஒன்றாக படித்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.