ஜப்பானில் நடைபெற்ற ஓட்டப் பந்தயத்தில் இலங்கைக்கு தங்கப் பதக்கம்!!

295

ஜப்பானில் நடைபெற்ற 11வது கினாமி மிஷிடகா நினைவு தடகளப் போட்டியில் ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இலங்கையின் காலிங்க குமாரகே தங்கப் பதக்கம் வென்றார். போட்டியை நிறைவு செய்ய காலிங்க குமாரகே 45.92 வினாடிகளை எடுத்துள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இதேவேளை, பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட நதிஷா ராமநாயக்க நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். அவர் போட்டியை முடிக்க எடுத்துக்கொண்ட நேரம் 54.02 வினாடிகள் ஆகும்.

இதேவேளை, பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றவிருந்த தருஷி கருணாரத்ன சுகவீனம் காரணமாக போட்டியில் பங்கேற்கவில்லை.