நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 மணி நேரம் அறுவை சிகிச்சை!!

382

நாய்க்கடியால் அவதிப்பட்ட சிறுமி முதலில் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நாயின் உரிமையாளர், குழந்தைக்காகும் முழு மருத்துவ செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாக ஒப்புக்கொண்டார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அதன் அடிப்படையில் இருவரும் அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவரே சிகிச்சைக்கு ஏற்பாடுகளை செய்தார். சிறுமி மே 6ம் தேதி அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தொடர்ந்து 3 நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த சிறுமிக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வதற்கு திட்டமிடப்பட்டது. அதன்படி ஆயிரம் விளக்கு பகுதியில் அப்போலோ மருத்துவர்கள் இன்று பிற்பகல் 2 மணிநேரம் பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை செய்தனர்.



அதன் பின்னர் குழந்தை தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறது. சிறுமிக்கு ராபீஸ் நோய் தாக்குதல் வராமல் பாதுகாக்கப்பட்ட, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வாரம் வரை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் மாநகராட்சி பூங்காவில் பணிபுரிபவரின் 5 வயது மகளை நாய் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. அச்சிறுமி தனியார் மருத்துவமனையில் மிக மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு இன்று அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை ஆயிரம் விளக்கு மாதிரி பள்ளி சாலையில் மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக பணிபுரிபவர் ரகு .

இவரது மனைவி சோனியா மற்றும் ஐந்து வயது மகள் சுதக்ஷா உடன் பூங்காவில் உள்ள அறையில் வசித்து வருகிறார். பூங்காவில் சோனியாவும் , மகளும் சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். அதே பகுதியில் வசித்து வரும் புகழேந்தி தான் வளர்க்கும் இரண்டு நாய்களை அழைத்து வந்துள்ளார்.

அவருடைய 2 நாய்களும் சிறுமி சுதக்ஷாவை சுத்துப்போட்டு மாறி மாறி கடிக்கத் தொடங்கின. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த தாய் சோனியா நாய்களிடமிருந்து தனது மகளை காப்பாற்ற நினைத்தபோது அவரையும் நாய் கடித்து குதறிவிட்டது.

இதனையடுத்து சிறுமியை போராடி மீட்டு சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் நாயின் உரிமையாளர் புகழேந்தியை ஆயிரம் விளக்கு போலீசார் கைது செய்தனர் .