யாழ் யுவதி உயிரிழப்பு தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

709

யாழ்ப்பாணத்தில் நேற்றியதினம் உயிரிழந்த யுவதி, காதல் உறவில் ஏற்பட்ட முறிவினால் உண்டான மனஅழுத்தம் காரணமாக தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

சம்பவத்தில் வல்வெட்டித்துறை ஸ்ரீ முருகன் கிராமத்தில் வசித்து வந்த யுவதியே உயிரிழந்தார். உயிரிழந்த யுவதி , அயல் கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவருடன் சில காலமாக உறவுமுறையில் இருந்துள்ளார்.

எனினும் அந்த வாலிபர் திடீரென மனம் மாறி வேறு ஒரு பெண்ணை காதலிக்க தொடங்கியதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்த பெண், இரவில் தனது வீட்டில் தனது உடலில் தீ வைத்து கொண்டதாக கூறப்படுகின்றது.



குடும்பத்தினர் எழுந்து பார்த்தபோது, ​​அவர் வீட்டிற்குள் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து , கிராம அதிகாரியிடம் தகவல் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிராம உத்தியோகத்தர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.