சாப்பாட்டில் பூச்சிமருந்து கலந்துகொடுத்த பேரன்.. தாத்தா பலி.. தாய் கவலைக்கிடம்!!

253

நாமக்கல் மாவட்டத்தில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சாப்பிட்ட சிக்கன் ரைசில் பூச்சி மருந்து கலக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது . விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்பட்டது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளனசிக்கன் ரைஸில் அவரது பேரன் பகவதி தான் பூச்சி மருந்து கலந்து கொடுத்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



நாமக்கல் பேருந்து நிலையம் அருகே கல்லூரி மாணவர் பகவதி என்பவர் சமீபத்தில் சிக்கன் ரைஸ் வாங்கி சென்றார். இந்த உணவைத் தான் தனது தாய் மற்றும் தாத்தாவிற்கு சாப்பிட கொடுத்துள்ளார்.

இதனை சாப்பிட்ட பகவதியின் தாத்தா சண்முகநாதன், தாய் நதியாவுக்கு உடல்நலக்குறைபாடு ஏற்பட்டதை அடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். சிக்கன் ரைஸை விநியோகித்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

சிக்கன் ரைஸ் உணவை பரிசோதனை செய்ததில் அதில் பூச்சி மருந்து கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சண்முகம் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

தாய் நதியாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பகவதியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் அளித்த வாக்குமூலத்தில் பகவதி கல்லூரி காலத்திலேயே அதிக தவறான பழக்கங்களுக்கு அடிமை ஆகியுள்ளார். இதனை பகவதியின் தாயும், தாத்தாவும் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளனர்.

இதனால், கோபடைந்த பகவதி தான் வாங்கி வந்த சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து கலந்து இருவருக்கும் கொடுத்துவிட்டார். பகவதியின் மீது கொலை வழக்கு உட்பட பல வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.