கோவிலுக்குள் இளம்பெண், இளைஞரை சுட்டுக்கொன்ற நண்பர்.. அடுத்து அவர் எடுத்த விபரீத முடிவு.. அலறிய பக்தர்கள்!!

545

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தனது நண்பர்களை சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் தீபக் ஜாட் (25). இவரும் தூரத்து உறவினர் பெண்ணான சினேகா ஜாட்டும் ஒரே கல்லூரியில் படித்து வந்தனர்.

அபிஷேக் யாதவ் (26) என்பவர் இவர்களுக்கு பொதுவான நண்பராக இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் தீபக் பயங்கரத்தை அரங்கேற்றியுள்ளார்.



அபிஷேக் தன்னை கோவிலுக்கு வருமாறு அழைத்ததாக தீபக்கிடம் கூறிய சினேகா, அவருடன் சேர்ந்தே சென்றுள்ளார். மூவரும் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

அப்போது தீபக் திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, தனது நண்பர்களை சுட்டுத்தள்ளியுள்ளார். இதில் சினேகா, அபிஷேக் இருவரும் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்தனர்.

அதன் பின்னர் தீபக் தன்னைத் தானே சுட்டு கோவில் வளாகத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தை நேரில் பார்த்த பக்தர்கள் பயத்தில் அலறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூவரின் உடல்களையும் கைப்பற்றினர். பின்னர் அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.