ஒரேவீட்டில் பறிபோன இரு உயிர்கள்!!

879

ஆனமடுவவில்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

ஆனமடுவ – நவகத்தேகம பிரதான வீதி லபுகம பகுதியில் வியாழக்கிழமை (25.01.2024) இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயமடைந்த தாய் ஆபத்தான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நவகத்தேகம, வெலேவெவ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய இராணுவ விஷேட படையின் லெப்டினன்ட் பதவி வகித்த ஜீவக செனவிரத்ன மற்றும் அவரது 10 வயதான மகன் மனுஜ பிரபாஸ்வர ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.



உயிரிழந்த இராணுவ வீரர் , மகன் மற்றும் மனைவி ஆகியோர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஆனமடுவ – நவகத்தேகம பிரதான வீதியின் ரஜமஹா விகாரைக்கு முன்பாக லொறியுடன் மோதியுள்ளது.

இதன்போது தந்தையும் மகனும் உயிரிழந்த நிலையில் தாய் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.