4 வயது மகனை கொன்று சூட்கேஸில் வைத்து பயணித்த பெண் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!!

609

இந்தியாவில்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்திய மாநிலம் கர்நாடகாவில் பெண் அதிகாரி ஒருவர், தனது 4 வயது மகனை சூட்கேசில் எடுத்துச் சென்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.கர்நாடகாவில் தனியார் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் சுசனா சேத் (39).



தன் கணவருடனான கருத்து வேறுபட்டதால் சுசனா சேத் அவரை பிரிந்து, தனது 4 வயது மகனுடன் வாழ்ந்து வந்தார். இவர் கடந்த சனிக்கிழமை கோவாவிற்கு மகனுடன் சென்றுள்ளார். அங்குள்ள தனியார் ஹொட்டலில் அவர் தங்கினார். நேற்று காலை சுசனா ஹொட்டல் அறையை காலி செய்துவிட்டு கிளம்பியுள்ளார். ஆனால் அவருடன் மகன் வெளியேறவில்லை.

மேலும், அவர் தங்கியிருந்த அறையை பராமரிப்பு ஊழியர் சுத்தம் செய்தபோது ரத்தக்கறைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து சுசனா வெளியேறும் போது அவரது மகன் உடன் இல்லாததை ஹொட்டல் நிர்வாகத்தினர் உறுதி செய்தனர். இதனால் சந்தேகமடைந்த ஹொட்டல் நிர்வாகத்தினர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் ஹொட்டலுக்கு விரைந்த பொலிஸார், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணையை தொடங்கினர். சுசனா சேதத்தை போனில் தொடர்பு கொண்டு பேசிய பொலிஸார், மகன் எங்கே என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் நண்பர் வீட்டில் விட்டு சென்றதாக கூறியுள்ளார். ஆனால் அவர் கூறிய முகவரியில் சென்று விசாரித்தபோது அது போலி என தெரிய வந்தது. இதனால் சுசனா பயணித்த டாக்சி ஓட்டுநரை பொலிஸார் தொடர்பு கொண்டு பேசினர்.

அப்போது அவரது காரில் சிறுவன் இல்லை என தெரிய வந்ததால், ஜமங்கலா காவல் நிலையத்திற்கு காரை கொண்டுவருமாறு பொலிஸார் கூறியுள்ளனர். அதன்படி ஓட்டுநரும் காவல் நிலையம் வர, காரினை பொலிஸார் சோதனை செய்தபோது சூட்கேசில் சுசனா சேத்தின் மகன் பிணமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது தான் சுசனா சேத் தன் மகனை கொன்று, சூட்கேசில் அடைத்து வைத்தது தெரிய வந்தது. கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், சுசனா சேத் மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.