இலங்கை நடிகை மீது பாலியல் துஸ்பிரயோகம்!!

1232

இலங்கையில்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இலங்கையின் 23 வயதுடைய பிரபல நடிகை ஒருவரை முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிலியந்தலை, ஜாலியகொட பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோதே இந்த அசம்பாவித்திற்கு நடிகை முகம் கொடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.



சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மொரட்டுவ கட்டுபெத்த பிரதேசத்திலிருந்து முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென முச்சக்கரவண்டியை வீதிக்கு அருகில் நிறுத்தி, தொழில்நுட்ப கோளாறை சரிபார்ப்பதாக கூறிய சாரதி, நடிகையை துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்துள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபரை நடிகை தள்ளிவிட்டு முச்சக்கரவண்டியிலிருந்து குதித்து தப்பித்துள்ளார். இதனையடுத்து முச்சக்கரவண்டியின் சாரதி நடிகையை விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தின் பின்னர் முச்சக்கரவண்டி கொழும்பு ஹொரணை வீதியூடாக பொரலஸ்கமுவ நோக்கி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.