எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம் : உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிப்பு!!

1135

லிட்ரோ..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

லிட்ரோ எரிவாயு நிறுவனம் எரிவாயு விலையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி இன்று (1.1.2024) முதல் எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.



இதற்கமைய, 2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 127 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 795 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு சிலிண்டரின் விலை 276 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1,707 ரூபாய் ஆகும். மேலும், 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 685 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 4,250 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விலை அதிகரிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.