திடீரென குறைவடைந்த பெரிய வெங்காயத்தின் விலை : அதிர்ச்சியளிக்கும் பச்சை மிளகாயின் விலை!!

1768

இலங்கையில்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

கடுமையாக உயர்வடைந்திருந்த பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளதாக சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.300 முதல் 350 ரூபா வரை இவ்வாறு பெரிய வெங்காயத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



கடந்த சில நாட்களாக சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை 600 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்பட்டது.பெரிய வெங்காய ஏற்றுமதியை இந்தியா நிறுத்தி வைத்துள்ள நிலையில், பாகிஸ்தான், துருக்கி, ஈரான் போன்ற நாடுகளில் இருந்து அதிக அளவில் பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள முக்கிய பொருளாதார நிலையங்களில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை தற்போது 2000 முதல் 2200 ரூபா வரை அதிகரித்துள்ளது.