யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு வித்தியாசமான கோணத்தில் உருவாகும் குறும்படம்..!

645

ஒரு சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருக்குள்ளும் சில விடயங்கள் நெருடிக் கொண்டிருக்கும் சிலர் அதை வெளிக்காட்டிக் கொள்வார்கள் பலர் தமக்குள் அமுக்கி வைத்துக் கொள்வார்கள் அந்தவகையில் வழமையாக எழுத்துக்களால் விதைக்கப்பட்டவை சில காட்சிகளால் நகைச்சுவையுடன் விபரித்துள்ளது தான் “துலைக்கோ போறியள்“ என்ற இக்குறும்படமாகும்.

இத்தலைப்பானது எமது பிரதேசங்களில் மிகவும் அருகிப் போய்க் கொண்டிருக்கும் ஒரு பேச்சு மொழியாகும். ஒருவர் போய்க் கொண்டிருக்கும் போது “எங்கே போகிறீர்கள்“ என்பது ஒரு அபசகுணமாககக் கருதப்படுவதால் இப்படி அழைத்து வினாவுவார்கள்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

உடுப்பிட்டி நாவலடி, நெல்லியடி, நவிண்டில், வதிரி போன்ற 5 களங்களில் உருவாக்கப்பட்ட 8 காட்சிகளுடன் இக்குறும்படம் உருவாக்கம் பெற்றுள்ளது.

இக்குறும்படத்திற்கான திரைக்கதை, வசனத்தை வலைப்பதிவரும் எழுத்தாளருமான ம.தி.சுதா எழுதி இயக்க முக்கிய பாத்திரங்களாக ஜெயதீபன், ஏரம்பு, செல்வம், செல்லா மற்றும் சுதேசினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.



ஒளிப்பதிவை செல்லா அவர்கள் மேற்கொள்ள படத் தொகுப்பை கே.செல்வமும் இசையை அற்புதனும் வழங்கியிருக்கிறார்கள். குறும்படத் தயாரிப்பை ரஜிகரன் மேற்கொள்ள படத்திற்கான பட வடிவமைப்புக்களை மதுரன் அமைத்திருக்கிறார்.

படம் தொடர்பான பணிகள் முடிவடைந்துள்ள போதும் வரும் மாதம் நடுப்பகுதியில் இக்குறும்படம் வெளியிடப்பட இருக்கிறது.

 

thulaikko poriyal poster