மட்டக்களப்பில்..
மட்டக்களப்பில் தொழில் இல்லாத காரணத்தால் நத்தாருக்கு பிள்ளைகள் மனைவிக்கு ஆடைவாங்கி கொடுக்க முடியாது மனமுடைந்த குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (24) இரவு 11 மணியளவில் இடம்பெற்றள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 42 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தை மேசன் தொழில் செய்துவந்துள்ளார். இந்த நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டிடத் தொழில் இல்லாத காரணத்தால் பொருளாதார ரீதியில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்துள்ளார்.
வருடத்தில் ஒருதடவை வரும் நத்தார் தினத்தை கொண்டாடுவதற்கு பிள்ளைகளுக்கு ஆடை வாங்கி கொடுக்க முடியாது நிலையினால் மனக்கவலையடைந்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம்(24) இரவு வீட்டைவிட்டு வெளியேறி யேசுநாதரின் பிறந்த தினம் எனது இறப்பு தினமான அமைய வேண்டும் என தவறான முடிவெடுக்க கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்துள்ளார்.
இதன்போது நீரில் தத்தளித்த நிலையில் பயம் ஏற்பட்டதையடுத்து காப்பாற்றுமாறு கத்தியதையடுத்து அவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் குறித்த நபரை பொலிஸார் கைது செய்து தவறான முடிவெடுக்க முயற்சித்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை இவரின் இந்த நடவடிக்கை பரபரப்பு அல்ல நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் எதிர்காலத்தில் நாட்டு மக்கள் வாழமுடியாது இவ்வாறு தவறான முடிவெடுக்கம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை இவரின் செயல் மூலம் அனைவருக்கும் உணர்த்துகின்றமை குறிப்பிடத்தக்கது.