நண்பனின் இறுதிச்சடங்கிற்கு சென்றவர் கொடூரமாக படுகொலை!!

1119

நீர்கொழும்பில்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

நீர்கொழும்பு, சீதுவ பிரதேசத்தில் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சென்றவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வெட்டிக்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லியனகே முல்ல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. லியனகே முல்ல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



இவ்வாறு உயிரிழந்த நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துக்கொள்வதற்காக சென்றிருந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.