வவுனியாவில் பாரதி முன்பள்ளி கலைவிழா – 2023

1787

வவுனியாவில் பாரதி முன்பள்ளி கலைவிழா – 2023

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

வவுனியா பாரதி முன்பள்ளியின் பாரதி கலைவிழா வவுனியா நகரசபை மண்டபத்தில் முன்பள்ளி அதிபர் ஜெயராஜா சந்திரா அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது



மங்கவிளக்கேற்றலுடன் விழா ஆரம்பமானதுடன் வரவேற்புரை, தலைமையுரை, அதிதிகள் உரையுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றிருந்தன

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீடம் ,இரசாயனவியல் துறை ஆகியவற்றின் துணைத்தலைவரான குகமூர்த்தி வேலாயுதமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டதுடன்,

சிறப்பு விருந்தினர்களாக வவுனியா வடக்கு வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்விப் பணிப்பாளர் சுந்தரலிங்கம் பிரபாகர் , ஆரம்பக்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் தர்மலிங்கம் தவேந்திரன் , வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை அதிபர் மாணிக்கம் அரிபூரணநாதன் , வவுனியா விபுலானந்த கல்லூரி அதிபர் மோகனதாஸ் ஞானமதி அவர்கள் கலந்து கொண்டமையுடன் அதிதிகளாக பெற்றோர்கள் , பழைய மாணவர்கள் , நலன் விரும்பிகள் , பாடசாலை சமூகத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.