தாய்லாந்து அழகிப் போட்டியில் மகுடம் சூடிய இலங்கைப் பெண்!!

570

தாய்லாந்தில்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

தாய்லாந்தின் பாங்கொக்கில் நடைபெற்ற 21 ஆவது ஆசிய திருமணமான அழகி போட்டியில் இலங்கை சார்பில் கலந்து கொண்டு எலிகன்ஸ் மேரிட் மிஸ் கிரவுன் ஒவ்(f) ஏசியா பட்டத்தை வென்ற திருமதி சஞ்சீவனி அம்புள்தெனிய மகுடத்துடன் நேற்று (05.12.2023) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.



சஞ்சீவனி அம்புள்தெனிய இந்த ஆண்டு 2023 இல் திருமணமான மிஸ் ஸ்ரீலங்காவாக தேர்ந்தெடுக்கப்பட்டார், இந்நிலையிலேயே அவர் ஆசிய திருமணமான அழகி போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஏழு ஆசிய நாடுகளைச் சேர்ந்த திருமணமான அழகுராணிகள் பங்கேற்ற இந்தப் போட்டி தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்றது.

திருமதி சஞ்சீவனி அம்புள்தெனிய தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை வரவேற்க அவரது தந்தை ஜயதிலக அம்புள்தெனிய மற்றும் அவரது தாயார் திருமதி மெனிகே அம்புள்தெனிய ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்துக்கு வருகை தந்திருந்தனர்.