நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் நீர்கொழும்பு கடற்கரையில் வைத்து நைஜீரியா மற்றும் கென்யா நாட்டு பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் தங்கியிருக்க இவர்களிடம் விசா இருக்கவில்லை என நீர்கொழும்பு சுற்றுலா பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
நீர்கொழும்பு சுற்றுலா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.