வவுனியா போக்குவரத்து பொலிஸாரினால் விபத்து தொடர்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு

674

வவுனியா போக்குவரத்து பொலிஸாரினால்

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அதிகரித்து வருகின்ற வீதி விபத்துக்குகளை தடுக்கும் முகமாக பாடசாலை மாணவர்களுக்கு வீதிப் போக்குவரத்து தொடர்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டது.



வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ரொசான் சந்திரசேகர அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்படும் இவ் செயற்றிட்டத்தின் முதற்கட்ட கருத்தரங்கு வவுனியா மன்னார் வீதியிலுள்ள காமினி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன் போது வீதி விபத்துக்கள் எவ்வாறு இடம்பெறுகின்றது , வீதி விதிமுறைகள் , பாதுகாப்பான முறையில் எவ்வாறு வீதியில் பயணிப்பது , மோட்டார் சைக்கில்களில் பயணிக்கும் போது தலைக்கவசத்தின் முக்கியத்துவம் போன்ற பல விடயங்கள் தொடர்பில் போக்குவரத்து பொலிஸாரினால் மாணவர்களுக்கு தெளிவூட்டல் வழங்கப்பட்டதுடன் , விபத்து தொடர்பிலான காணோளிகளும் மாணவர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டன.

இவ் கருத்தரங்களில் 100க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது சந்தேகங்களை தெளிவுபடுத்தியதுடன் பல்வேறு விடயங்களையும் அறிந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்