கோர விபத்தில் கணவன் மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்!!

998

விருதுநகரில்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

விருதுநகரில் சாலை விபத்தில் சென்னையைச் சேர்ந்த தம்பதிகள் உயிரிழந்துள்ளனர்.சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் (30). இவர் தனியார் கம்பெனி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி நித்திஷா (27). இந்த தம்பதிக்கு ஜெனிஷா ஸ்ரீ ( 9), பிரணவ் ஆதித்யா (8) என சிறுவர்கள் உள்ளனர்.



இந்நிலையில், மனோஜ் தனது குடும்பத்தாருடன் காரில் நெல்லையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இதையடுத்து கோவில்பட்டியிலிருந்து விருதுநகர் நோக்கி கார் சென்று கொண்டிருந்தபோது தனியார் பேருந்து மோதியுள்ளது.

இதில் காரின் முன்பகுதி முழுவதுமாக நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் மனோஜ் அவரது மனைவி நித்திஷா ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் சிறுவர்கள் ஜெனிஷா ஸ்ரீ, பிரணவ் ஆதித்யா இருவரும் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

இவர்களை மீட்ட போலிஸார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.