மனைவியுடன் தற்கொலை முயற்சி செய்த நபர் : நடந்த விபரீதம்!!

613

நாமக்கல் அருகே..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

நாமக்கல் அருகே கந்துவட்டி கொடுமையால் பா‌ஜக நிர்வாகி மனைவியுடன் விஷமருந்தி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பொத்தனூர் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெயசூர்யா (26). இவருக்கு திருமணமாகி மோகனபிரியா என்ற மனைவி உள்ளார். ஜெயசூர்யா பரமத்திவேலூரில் இருச்சக்கர வாகனம் பழுது நீக்கும் பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார்.

மேலும் ஜெயசூர்யா பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளராகவும் உள்ளார். இவர்களுக்கு 2 மாதங்களுக்கு முன்னர் பிறந்த ஆண் குழந்தை ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டது.

இந்நிலையில் இவர் இன்று தனது மனைவியுடன் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்றுள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல் தலைமை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பரமத்திவேலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இருவரும் கந்துவட்டி கொடுமையால் தான் விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் அவர்கள் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் தற்கொலை முயற்சிக்கு முன்னதாக ஜெயசூர்யா ஒரு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு விஷமருந்தியது தெரியவந்துள்ளது.

மேலும் அந்த கடிதத்தில், ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் மருத்துவ செலவிற்காக ஜெயசூர்யா – மோகன் பிரியா தம்பதியினர் தெற்குநல்லியம்பாளையத்தை சேர்ந்த கவிதா, சரஸ்வதி, அப்துல், சங்கர் உள்ளிட்டோரிடமும் மைக்ரோ பைனான்ஸ்கள் (அரைஸ் லோன், கிராமின் கூட்டா, கிராமவிடியல்) ஆகியோரிடமும் பல லட்சங்கள் கடன் வாங்கி மருத்துவ செலவு செய்துள்ளார்.

இதில் கடன் வாங்கிய சிலர் அதிக வட்டி கேட்டு மிரட்டுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பரமத்திவேலூர் காவல்நிலையத்தில் கந்துவட்டி தொடர்பாக புகார் ஒன்றை அளித்துள்ளதாகவும் ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் புகார் அளித்த அனைவரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தங்களின் குடும்பத்தாரை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் இதற்கு ஒரு நல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதனை ஒரு அடிமட்ட தொண்டனாக கேட்டுக்கொள்கிறேன் எனவும் உருக்கமான கடிதம் எழுதி வைத்துள்ளார். இதுதொடர்பாக பரமத்திவேலூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது இலங்கையில் நடப்பது என்ன| கப்பல் மற்றும் விமான தளங்களுக்கு அதிஉயர் பாதுகாப்புடன் சென்றது யார்