அவுஸ்திரேலிய அணியின் புதிய பயிற்றுவிப்பாளரானார் டெரன் லீமன்..

745

leahman
அவுஸ்திரேலியக் கிரிக்கெட் அணியின் புதிய பிரதம பயிற்றுவிப்பாளராக அவ்வணியின் முன்னாள் வீரர் டெரன் லீமன் நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்த மிக்கி ஆதரை நேற்று திடீரென அப்பதவியிலிருந்து நீக்கிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை புதிய பயிற்றுவிப்பாளராக லீமனை நியமித்துள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அண்மைக்காலமாக சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தத் தவறி வருவதுடன் ஒழுக்கப்பிரச்சினைகளுக்கும் உள்ளாகிவருகின்றது. இந்நிலையிலேயே மிக்கி ஆதர் நீக்கப்பட்டு புதிய பயிற்றுவிப்பாளராக டெரன் லீமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அவுஸ்திரேலியாவின் உள்ளூர்ப் போட்டிகளிலும், பிறிஸ்பேர்ண் ஹீற் அணியிலும், அவுஸ்திரேலிய “ஏ” அணியிலும் பயிற்றுவிப்பாளராக டெரன் லீமன் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்தார்.

இதனையடுத்து லீமனுக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை இந்த் வாய்ப்பை அளித்துள்ளது.



இதனிடையே அணியின் தேர்வாளர்கள் குழுவிலிருந்து அணித்தலைவர் மைக்கல் கிளார்க் விலகியுள்ளார். இந்திய அணியுடனான தொடருக்குப் பின்னர் தன்னை தேர்வுக்குழுவிலிருந்து நீக்குமாறு கிளார்க் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.