மனைவிக்காக முதியவர் கட்டும் மற்றுமொரு குட்டி தாஜ்மஹால்..!

756

ஷாஜகான் அவரது மனைவி மும்தாஜ் நினைவாக கட்டிய தாஜ்மஹாலை போலவே ஒரு சிறிய தாஜ்மஹாலை முதியவர் ஒருவர் அவரது மனைவி நினைவாக கட்டி வருகிறார்.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த பைசுல் ஹசன் காதிரி (77), இவரது மனைவி பேகம் டாஜ்முல்லி. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு காலமானார்.மனைவியின் மறைவிற்கு பின்பு அவரது நினைவாக ஒரு சிறிய தாஜ்மஹாலை கட்ட தொடங்கியுள்ள பைசுல்,

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அவருக்கு சொந்தமான 5000 சதுர அடி நிலத்தில், ஆக்ராவில் உள்ள நிஜ தாஜ்மஹாலை போலவே சிறிய தாஜ்மஹாலை கட்டிவருகிறார்.இதுவரை இந்த குட்டி தாஜ்மகாலுக்கு ரூ.20 லட்சம் வரை செலவு செய்துள்ளார்.

அவரது மனைவியின் நினைவகம் இந்த குட்டி தாஜ்மகாலின் மையப்பகுதியில் அமையுமாறு வடிவமைத்துள்ளார்.மனைவி மீது கொண்ட அதீத அன்பால், குட்டி தாஜ்மகாலை கட்டி வரும் பைசுல், தான் இறந்த பின்பு தன்னையும் மனைவியின் அருகில் அடக்கம் செய்யவேண்டுமென உயில் எழுதிவைத்த்துள்ளராம்.



என்னே இந்த இல்லரத்தம்பதிகளின் இணக்கப்பாடு! திருமணம் -இல்லறரம  போன்றவற்றை வெறும் பொழுது போக்காக கருதும் இன்றைய இன்றைய இளசுகளுக்கு இது ஒரு முன்னுதாரணமாக இருக்கட்டும்.

tajmahal_002.w540tajmahal_003.w540