கொழும்பில் 1425 பேருக்கு டெங்கு- ஏழு பேர் மரணம்..!

600

கொழும்பு மாநகர சபையின் 12 நகர பிரதேசங்கள் டெங்கு நோய் பரவும் கடும் ஆபத்துக்குரிய இடங்களாக இருப்பதாக நகர பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் பிரதீப் காரியவசம் தெரிவித்துள்ளார்.

தெமட்டகொடை- வனாத்தமுள்ள- பொரளை- கொம்பனித்தெரு- மட்டக்குளி- முகத்துவாரம்- மகவத்தை- கிருலப்பனை- பாமன்கட- வெள்ளவத்தை- நாரஹேன்பிட்டி- கறுவாக்காடு ஆகிய பகுதிகளே இவ்வாறு அடையாளங் காணப்பட்டுள்ளன.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

தினசரி புதிதாக 183 டெங்கு நோயா ளர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றனர்.

கொழும்பு நகரில் 1425 நோயாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். ஏழுபேர் மரணித்துள்ளனர்.



பொரளை ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் ஆஸ்பத்திரியில் நேற்று ஒரு குழந்தை டெங்கு நோயினால் மரணித்துள்ளது.

தேசிய நூதனசாலை- மகாவலி கேந்திர நிலையம்- ஜோன் டி சில்வா அரங்கு- அரச அச்சகம் உட்பட 14 அரச நிறுவனங் கள் டெங்கு குடம்பி பரப்பும் இடங்களாக காணப்பட்டமைக்காக அந்த நிறுவனங் களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்ட தாகவும் டொக்டர் காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பு நகரில் 20500 அரச தனியார் நிறுவனங்களும்- வீடுகளும் சோதனைக் குட்படுத்தப்பட்டன.

இதில் 1170 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

550 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என்றும் டொக்டர் காரியவசம் மேலும் தெரிவித்தார்.