தொடர்ந்து உலக நாடுகள் பலவற்றில் தோன்றும் மர்ம உலோகத் தூண்கள் : ஏலியன்கள் காரணமா?

2997

உலோகத் தூண்கள்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

உலக நாடுகள் சிலவற்றில் ஆங்காங்கு மர்ம உலோகத்தூண்கள் திடீரென தோன்றியதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், இப்போது பல நாடுகளில் வகை வகையாக தூண்கள் தோன்றத் துவங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



இப்போது தங்கத்தூண் ஒன்றும், வெள்ளித்தூண் ஒன்றும் தோன்றியுள்ளதை வைத்துப் பார்த்தால் உண்மையிலேயே ஏலியன்கள்தான் இவற்றைச் செய்கின்றனவா என்று எண்ணத்தோன்றுகிறது.

சமீபத்தில்தாண், ஏலியன்கள் உள்ளன, அவை உலகத்துடன் தொடர்பு கொண்டன, ஆனால், அந்த செய்தியைத் தாங்கும் அளவுக்கு பூமியிலுள்ளவர்கள் இன்னமும் தயாராகவில்லை என Haim Eshed (87) என்னும் இஸ்ரேல் நாட்டு விண்வெளி அறிவியலாளர் பரபரப்பை ஏற்படுத்தும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிலுள்ள உத்தா பாலைவனத்தில் ஒன்று, ரொமேனியா நாட்டில் ஒன்று, மற்றும் அமெரிக்காவின் Pine Mountain என்ற இடத்தில் ஒன்று என மூன்று உலோகத்தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டதும், அவற்றிற்கு,

The Most Famous Artist என்ற பெயர் கொண்ட ஒரு குழுவினர் உரிமை கொண்டாடியதாக செய்திகள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது. பின்னர், Isle of Wight என்ற பிரித்தானியத் தீவில் அடுத்த உலோகத்தூண் தோன்றியது.

தற்போது, ஜேர்மனியிலுள்ள Sulzbach நகரில் வெள்ளியாலான ஒரு தூணும், ஸ்பெயினிலுள்ள Ayllon நகரில் வெள்ளியாலான ஒரு தூணும் தோன்றியுள்ளன.

இதற்கு முன் Colombiaவிலுள்ள Cundinamarca என்ற இடத்தில் ஒரு தங்க நிறத்தூண் தோன்ற, அதுதான் மற்ற எல்லா தூண்களையும் கட்டுப்படுத்தும் தலைமை தூண் என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.

இத்துடன், ஆறு நாடுகளில் மர்மத்தூண்கள் உருவாகியுள்ளதால், மேலும் மேலும் மர்மம் அதிகரித்தவண்ணம் உள்ளதை மறுக்க இயலாது.