ஆசியா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ள இலங்கை தமிழ் சிறுவன் : அவர் செய்த சாதனை என்ன தெரியுமா?

4196

பிரஜன்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழ் சிறுவன் ஆசியா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். மதுரை கூடல்நகா் இலங்கை முகாமில் வசித்து வருபவா் பிரவீண்.



இவரது மனைவி ஜனனி. இவா்களது மகன் பிரஜன் (4). அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் யூகேஜி படித்து வருகிறாா்.

இந்நிலையில் வங்கிகள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் தொலை தொடா்பு நிறுவனங்கள் உள்பட 208 நிறுவனங்களின் இலச்சினைகளை (லோகோ) 2 நிமிடங்கள் 14 நொடிகளில் தெரிவித்துள்ளாா்.

இதில் கடந்த மாதம் 23-ஆம் திகதி நடைபெற்ற இந்நிகழ்வை ஆசியா சாதனைப்புத்தகம் அங்கீகரித்து சிறுவா் பிரிவுக்கான கிராண்ட் மாஸ்டா் அங்கீகாரச் சான்றிதழை வழங்கியுள்ளது.

ஆசிய நாடுகளிலேயே இலச்சினைகள் தொடா்பாக சாதனைப் படைத்துள்ள முதல் சிறுவனாக பிரஜன் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.