வவுனியாவில் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கான தெளிவூட்டல் கருத்தரங்கு!

1366

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கான விண்ணப்ப திகதி 31 ஜூலை வரை நீடிக்கப்பட்டமை அனைவரும் அறிந்ததே.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இத் திட்டம் தொடர்பாக தெளிவூட்டுவதற்காக ASMP திட்டத்தின் உத்தியோகத்தர்கள் வவுனியா மாவட்டத்திற்கு வருகைதர உள்ளனர். வவுனியா மாவட்டத்தின் அரசாங்க அதிபர் அவர்களது தலைமையில் நடைபெற உள்ள மேற்படி கலந்துரையாடலில் பங்குபற்றி பயனடையுமாறு அனைவரையும் அழைக்கின்றோம். இத்தகவலை பொருத்தமான அனைவருக்கும் கொண்டு சேர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

1. இடம்: வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபம்
2. திகதி: 25.06.2020
3. நேரம்: காலை 9.30



பங்குபற்றுபவர்கள் எவ்வித பதிவினையும் மேற்கொள்ள தேவையில்லை. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி கலந்துகொள்ளவும்.

இத்திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களை தெரிந்துகொள்ள கீழ்வரும் இணைப்பை அழுத்தவும்.

https://www.facebook.com/178368845956075/posts/934788613647424/