வித்தியாசமான நிறத்தில் பிறந்த குழந்தை : தாயை சந்தேகித்த மருத்துவர்கள் : அவர்களது இன்றைய நிலை!!

756

வித்தியாசமான நிறத்தில்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

வித்தியாசமான நிறத்தில் குழந்தை பிறந்ததால், ஒரு பெண்ணின் நடத்தையை மருத்துவர்களே சந்தேகித்தனர். ஆனால் அந்த குழந்தையும் அவள் தங்கையும் இன்று மொடல்களாக கலக்கிக்கொண்டிருக்கிறார்கள்.



14 ஆண்டுகளுக்கு முன், கசகஸ்தானைச் சேர்ந்த Aiman Sarkitova (38)க்கு முதல் குழந்தை பிறந்தபோது, அந்த குழந்தையின் நிறம் வித்தியாசமாக இருந்ததால், அவர் ஒரு ரஷ்ய நாட்டவருடன் தொடர்பு வைத்திருப்பதாக மருத்துவர்களே சந்தேகப்பட்டனர். அவரது மகள் Asel வெள்ளை நிறத்தில் இருந்ததுதான் அதற்கு காரணம்.

மரபியல் ஆய்வுகள் அப்போது அவ்வளவு முன்னேறியிருக்கவில்லை. 12 ஆண்டுகளுக்குப் பிறகு Kamila பிறந்தபோது, அவளும் வெள்ளை நிறத்தில் இருந்தாள்.

இன்றைய மருத்துவம் அதற்கான காரணத்தை அறிந்துவைத்துள்ளது. ஆம், சகோதரிகள் இருவரும் அல்பினிசம் என்னும் குறைபாட்டுடன் பிறந்திருந்தார்கள்.

அத்தகைய பிள்ளைகளின் தோல் வெள்ளை நிறத்தில் இருப்பதோடு, அவர்களது கண்களிலும் பிரச்சனை இருக்கும். வெளியே செல்லும்போது, உடலில் வெயில் படாதவாறு உடையணிந்து, கருப்புக் கண்ணாடி அணிந்து செல்லவேண்டும் அவர்கள்.

தனது மகளுக்கு ஏதோ பிரச்சனை என்று எண்ணி, முதலில் அவளை உடற்குறைபாடுகள் உடைய பிள்ளைகளின் பள்ளியில் சேர்த்த Aiman, பின்னர் படித்து, தன் பிள்ளைகளுக்கு அல்பினிசம் என்பதை தெரிந்துகொண்டார்.

தற்போது கசகஸ்தானில் பிள்ளைகள் இருவரும் மொடலிங் செய்துவரும் நிலையில், அவர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.