அமெரிக்க இளம் பெண்ணை காதலித்து கரம்பிடித்த தமிழ் இளைஞன்!!

558

தமிழ் இளைஞன்

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அமெரிக்காவில் பொறியியலாளராக பணிபுரிந்து வரும் தமிழக இளைஞர், அங்குள்ள பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.



புதுவையில் ரேடியர் மில் மேலாளராக பணியாற்றி வந்த சந்திரசேகர், என்பவரது மகன் தீபக் முரளி. இவர் தனது இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவில் ராப்லஸ் என்ற நிறுவனத்தின் துணைத்தலைவராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் அங்கு வேறு ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தாரா பையர்ஸ் என்கிற வெள்ளைக்கார பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

இதனையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டனர். இவர்களுடைய காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, தமிழ் முறைப்படி, புதுவை ஆனந்தா திருமண மண்டபத்தில் இன்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

இதில் கலந்துகொள்வதற்காக தாரா பையர்ஸின் உறவினர்கள் 25 பேர் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வருகை தந்திருந்தனர்.