வவுனியாவில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்களுக்கு சம்ளம் வழங்கப்படவில்லை..!

800

graவவுனியாவில் அண்மையில் நியமனம் பெற்ற பட்டதாரிகள் சிலருக்கு சம்பளங்கள் வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

வவுனியாவில் உள்ள அரச திணைக்களங்களில் ஒரு வருடத்திற்கு மேலாக பட்டதாரி பயிலுனர்களாக கடமையாற்றியவர்களுக்கு கடந்த 10 மாதம் நிரந்த நியமனங்கள் வழங்கப்பட்ட போதும், குறிப்பிட்ட சில திணைக்களங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு இதுவரை கடந்த மாதத்திற்குரிய சம்பளமும் கடந்த 7 ஆம் மாதத்தில் இருந்து வழங்கப்பட வேணடிய சம்பள நிலுவையும் வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நிரந்தர நியமனம் பெற்ற உத்தியோகத்தர்கள் பொருளாதார பிரச்சனைகளை எதிர் நோக்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சில திணைக்களங்களில் பணியாற்றுபவர்களுக்கு சம்பளங்கள் வழங்கப்பட்டுள்ள போதும் சில திணைக்களங்களின் அசமந்தப் போக்கு காரணமாகவே மற்றைய திணைக்கங்களைச் சேர்ந்தவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என தெரியவருகிறது.