மாகாணசபையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் முடிவுகளை மீறி செயற்பட்டமைக்கு கூட்டமைப்பு ஆட்சேபம்..!

424

TNAகிழக்கு மாகாண சபையில் கடந்த இரண்டு நாட்களாக வரவு செலவுத்திட்ட விவாதம் நடந்து வரும் நிலையில் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மீறி இன்றைய தினம் சபையை நடத்தியமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்பேசம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் மாலை 6 மணியுடன் முடிவடைய வேண்டும் என எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாக இரவு 7 மணிவரை சபையை நடத்தியமைக்கு த.தே.கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் இந்த ஆட்சேபத்தைத் தெரிவித்தார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இது விடயமாக கருத்துத் தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் துரைரெட்ணம்,

நேற்றைய தினம் கிழக்கு மாகாண சபையின் கட்சித் தலைவர் கூட்டம் காலை 9 மணிக்கு நடைபெற்றது. அக் கூட்டத்தில் நேற்றைய தினம் மாலை 6 மணியுடன் சபை விவாதத்தினை இடைநிறுத்தி இன்று வியாழக்கிழமை தொடர்வது என்று முடிவு எடுக்கப்பட்டிருந்தது.



ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் இந்த முடிவை மீறி மாலை 5 மணிக்கு முடிவை மறுதலித்து, தொடர்ச்சியாக 7 மணிவரை சபை நடத்தி நேற்றைய கல்வி அமைச்சின் விவாதத்தினை தொடர்ந்து நடத்த வேண்டும் எனக் கோரியிருந்தனர்.

இதற்கு எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் முடிவுக்கு அமைய 6 மணிக்கு ஒத்திவைத்து நாளை வியாழக்கிழமை தொடர வேண்டும் எனக் கூறினர்.

குறிப்பாக கல்வி அமைச்சில் கல்வி, காணி தொடர்பான விபரங்கள் அதிகம் உள்ளதகால் அவை விவாதிக்கப்பட வேண்டும் என்ற வகையில் விவாதிக்க காலம் தேவை எனக் கூறிய போதும் இவ் விவாதத்தினை 7 மணிக்கே நிறைவுக்குக் கொண்டு வரவேண்டும் என ஆளும் தரப்பினர் கூறினர்.

ஆனாலும் கட்சித் தலைவர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய விவாதத்தினை முடித்து 6 மணிக்கே வெளியேறினோம். ஆனாலும் ஆளும் தரப்பினர் அவ்வேளையில் வாக்கெடுப்பை நடத்தி விவாதத்தினை நடத்த வேண்டும் என்று கோரியமைக்கு அமைவாக சபாநாயகர் தொடர்ச்சியாக சபையை நடத்தியுள்ளார்.

அந்த வகையில் சபைச் சம்பிரதாயத்தினை மீறி, வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பையும் உதாசீனம் செய்து, ஜனநாயகத்திற்கும் கிழக்கு மாகாண மக்களுக்கும் துரோகம் செய்துள்ளார். இது பெரும் துரோகமாகும் எனவும் துரைரெட்ணம் தெரிவித்தார்.