வேதிகாவுக்கு தேவையா இந்த விளம்பரம்!

578

vedபடம் மற்றும் அதன் நாயக – நாயகிகளுக்காக சில பப்ளிசிட்டி ஸ்டன்ட்டுகளை அடிப்பது சினிமாவில் வழக்கமான ஒன்று.

நடிகை படப்பிடிப்பின்போது கடலில் விழுந்தார், குளத்தில் விழுந்தார், மாடு முட்டியது, கல் தடுக்கி விழுந்ததில் ரத்தம் கொட்டியது என்றெல்லாம் அவர்களின் பிஆர்ஓக்கள் பரபரப்பு தகவல் பரப்புவார்கள்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

சரி, தெரிஞ்ச விஷயம்தானே என அவற்றையெல்லாம் செய்தியாக்கி இலவச பப்ளிசிட்டியும் தருவார்கள் மீடியாக்காரர்கள்.

கொடுக்கிறது டுபாக்கூர் தகவலாக இருந்தாலும், அதையும் சரியாக செய்ய வேண்டாமா… நம்ம நடிகை வேதிகாவுக்கு பப்ளிசிட்டி தருவதாகக் கூறிக்கொண்டு, சமீபத்தில் அவரது ஆட்கள் செய்திருக்கும் வேலையைப் பாருங்கள்…



“சில தினங்களுக்கு முன் சிங்காரவேலன் என்ற மலையாளப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் நடித்துக் கொண்டிருந்த போது வேதிகா தவறி குளத்தில் விழுந்துவிட்டார். இருந்தாலும் தைரியமாக சமாளித்து கரையேறி, ஷூட்டிங்கைத் தொடர்ந்தார். அவர் தைரியத்தை அனைவரும் பாராட்டினார்கள்´ என்று செய்தி பரப்பிவிட்டனர்.

ஆனால் சிங்காரவேலன் என்ற படம் கடந்த செப்டம்பர் 13-ம் திகதியே வெளியாகிவிட்டது.

அதைவிடக் கொடுமை, அதன் க்ளைமாக்ஸ் காட்சி கடந்த மே மாத இறுதியில் படமாக்கப்பட்டதாம்.

வேதிகா இப்போது நடித்துக் கொண்டிருப்பது வசந்த பாலனின் காவியத் தலைவன் படத்தில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை அம்பலமானதும், மலையாள பத்திரிகைகள் ரவுண்டு கட்டி கிண்டலடித்து வருகின்றன வேதிகாவை!