ரஜினி இரசிகர்களுக்கு வருத்தம்மிக்க ஒரு செய்தி..!

461

rajiniகோச்சடையான் படம் பொங்கல் வெளியீட்டிலிருந்து பின்வாங்கியிருக்கிறது. இந்த சோக செய்தியுடன் இன்னொரு வருத்த செய்தி இரசிகர்களுக்கு.

படத்தின் நீளமும் ஏறக்குறைய இருபது நிமிடங்கள் குறைக்கப்பட்டிருக்கிறது. சௌந்தர்யா இயக்கியிருக்கும் இந்த மோஷன் கேப்சரின் தொழில்நுட்பப் படத்தில் அனிமேஷன் ரஜினியை மட்டும் காண்பித்தால் இரசிகர்களை ஈர்க்க முடியுமா என்ற சந்தேகம் ஆரம்பம் முதலே இருந்தது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அதனால் நிஜ ரஜினிகாந்த் லைவ்வாக வரும் காட்சியையும் சேர்த்திருக்கிறார்கள். ஒருமாதிரியான அவியல் காம்பினேஷன். இந்த மிக்சிங்கில் சில கூடுதலாக கலந்துவிட, 145 நிமிடங்கள் ஓடக்கூடிய படத்தை எடிட் செய்து 125 நிமிடங்களாக குறைத்திருக்கிறார்கள்.